வாகன சோதனையின் போது ஓட்டுனர்கள் வைத்திருக்கும் காகிதம் வடிவிலான ஆவணங்களுக்கு பதிலாக மின்னணு ஆவணங்களை சமர்ப்பிக்க முறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது ஓட்டுநர் உரிமம் வாகனப்பதிவு ஆவணங்கள் காப்பீடு சான்றிதழ் ஆகிய ஆவணங்களை டிஜிலாக்கர்(Ddigilocker) மற்றும் எம்பரிவாகன்(Mparivahan) மூலம் வாகன ஓட்டிகள் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கலாம்
நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஓட்டுனர் உரிமம் வழங்குதல் உள்ளிட்ட ஐந்து புதிய நடைமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன ஓட்டுநர் உரிமம் மருத்துவ காப்பீடு ஆகியவற்றை இணையதளம் வாயிலாக பெறலாம்.
புதிதாக வழங்கும் ஓட்டுநர் உரிமத்தில் க்யூ ஆர் கோடு(QR code) மைக்ரோசிப் இடம்பெறவுள்ளது.
புதிய விதிமுறைகளின்படி வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசினால் 1,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments